9300 அடிப்படை ஊதியம் + ❄❄4200 தர ஊதியம் கேட்டு போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த ஊதியத்திற்க்கு பதிலாக 💧 750 💧 சிறப்பு ஊதியமாக பெற்று தரப்பட்டது. அந்த 750 ஊதியம் அடிப்படை + தர ஊதியத்திற்க்கு பதிலாகவே வழங்கப்பட்டது. எனவே ஊதிய உயர்வின் போதும் , அகவிலை படி உயர்வின் போதும் இந்த 💧750 💧 கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தற்போது அனைத்து வாட்சாப் குழு மற்றும் இணையத்தில் வந்து கொண்டிருக்கும் ஒருநபர் குழுவிற்கு அனுப்பிட சொல்லும் கடிதம் மாநில போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட கடிதம் இல்லை.
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட உள்ளன.
கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளியின் வளர்ச்சியைப் பாராட்டி தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2018 - 19ம் கல்வி ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை, கொண்டு வரப்பட்டுள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.
மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும் ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு திருப்பிவிடப்படும் நிதியை தடுத்து அரசுப்பள்ளிகளை அந்நிதியில் மேம்படுத்தலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில் உதவும் புதிய பாட்காஸ்ட் பிளேயர். ஆண்ட்ராய்டு பயனாளிகள் பிற பிளேயர்ஸ்களை பணம் கொடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் கூகுள் தற்போது எவ்வித கட்டணமும் இன்றி இந்த பிளேயரை அறிமுகம் செய்துள்ளது.
பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
தமிழகத்தில், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி அனுப்பிய சுற்றறிக்கை:
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 27 வது இடத்தை கீர்த்திவாசன் பிடித்துள்ளார். திருச்சியில் படித்த கீர்த்திவசான் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைந்துள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை சப்தமில்லாமல் ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு நோய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நோயின் வகைகளையும், இதை குணப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறது இந்தக் கட்டுரை.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்
'சம வேலைக்கு சம ஊதியம்' என்று தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இன்று, 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது.
நம் தாத்தா, பாட்டி காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களாக புழக்கத்தில் இருந்தன. ரீஃபைண்டு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், 30 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு வந்த பின், ரீஃபைண்டு முறையிலேயே கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் வகைகளுடன், கடுகு எண்ணெய், சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பலவிதமான எண்ணெய்களும் புழக்கத்துக்கு வந்துவிட்டன.
பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள் இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, தேர்வுத்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.138, Dated: 24th April, 2018 Tamil Nadu Revised Pay Rules, 2017– Constitution of One Man Committee for rectification of pay anomalies–Amendment- Orders - Issued.
எடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அர்த்தம் இல்லை. உடலின் ஹார்மோன்கள் சரியான இயக்கத்தில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பிளஸ் 1, பிளஸ் 2வில், மொழி பாடங்களில், இரண்டு தாள் முறையை மாற்றி, ஒரே தேர்வாக நடத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன், தேர்வுத் துறைக்கு, 36 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் சுமை குறையும் வாய்ப்புள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது .
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து "NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள்,710 இளநிலை உதவியாளர்கள் என, 4,970 பணியிடங்கள், 2011 - 12ல் நிரப்பப்பட்டன.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று, பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு நடக்கிறது.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 26ல், பொருளியல் தேர்வு நடந்தது.
தமிழகத்தில், இன்று(ஏப்.,25) எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பட்டப் படிப்புகள் வழங்கத் தகுதி இல்லாதவை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு இ-சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.
பெரும்பாலான பயனர்களுக்கு ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் தெரிந்துகொள்ளவே இல்லை. அதனால் அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். இதோ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் மறைந்துள்ள 7 சிறப்பம்சங்கள்..
தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம்.
பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.