'விடுமுறையில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும்' - CEO சுற்றறிக்கை

தமிழகத்தில், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி அனுப்பிய சுற்றறிக்கை: 

வகுப்பறை மராமத்து பணியை, கோடை விடுமுறையில் செய்து முடிக்க வேண்டும்.

குறிப்பாக, அனைத்து பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டம், வசதி, நலத்திட்ட உதவி உள்ளிட்டவற்றை, மக்களிடம் கொண்டு சென்று, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். 

சேர வரும் மாணவர்களை, எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இதற்காக, கோடை விடுமுறையில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments