முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது .
முன்னதாக மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘டாக்டர்கள் பணிப்புரியும் பகுதிகளை பிரித்து, தகுதி நிர்ணயம் செய்தது தவறு. தமிழக அரசின் அரசாணையில் விதிமுறைகளும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை. மேலும், மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்களுக்கு என 50 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று தெரிவித்தது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மருத்துவ மேற்படிப்பில் உள்ஒதுக்கீட்டை இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிக்காட்டுதலின் படி நடத்துவதற்கு பதிலாக, அந்தந்த மாநில அரசின் ஒதுக்கீட்டு நடைமுறையில் இந்தாண்டு நடத்திட அனுமதி கோரிய இடைக்கால கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 2016ம் இந்திய மருத்துவ சங்கம் கொண்டு வந்த விதிமுறை செல்லும் என்றும் அதன் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Comments
Post a Comment