பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பஸ்சில் இலவச பயணம்: மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுரை


போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில்  நடத்துனர் இல்லாத விரைவு பேருந்துகள் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை.

இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவச பஸ் பாசுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுவரை சீருடை அணிந்திருந்தாலே போதும். பேருந்தில் அனுமதிக்கலாம் என்று போக்குவரத்து துறை  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Post a Comment