Google Maps! Latest Update for Bikers!

உலகின் எந்த மூலைக்கும் கூகுள் தரைப்பட உதவியுடன் எளிதில் செல்லலாம். அந்த அளவு சாலை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவான தகவல்களையும் நமக்குத் தருகிறது. இதுமட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைக்கூட எளிதில் அடையாளம் காட்டி அதற்கான வழியையும் அதுவே சொல்லிவிடும்.
தற்போது கார் ஓட்டுநர்களின் தவிர்க்க முடியாத நண்பனாக மாறியுள்ளது கூகுள் தரைப்படம். இந்த நிலையில், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு புது மற்றும் பிரத்யேக வசதியை இந்தியாவுக்காக வழங்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவில் கார்கள், லாரிகளைவிட அதிகமாக இரு சக்கர வாகனங்களே பயன்பாட்டில் உள்ளன.
அதனால் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கென தனிப்பட்ட வழிக்காட்டுதல்களை கூகுள் வெளியிட உள்ளது. கார்கள் மற்றும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில்கூட இருசக்கர வாகனங்களால் எளிதில் நுழைய முடியும். தற்போது கூகுள் கொண்டுவர உள்ள இந்தச் சேவை சில எளிய வழிகளை இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு காண்பிக்கும்.

அதுமட்டுமல்லாது, நாம் செல்லும் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் அட்டவணைகள், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவற்றின் அட்டவணைகளையும் இனி கூகுள் மேப் மூலம் பார்த்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி கூகுள் தரைப்படத்திலேயே அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் அறிந்துகொள்ளலாம். என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்