9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்
மாணவர்களின் கனவை நனவாக்குவதே
புதிய பாடத் திட்டத்தின் நோக்கம்: பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் ஆக. 3 முதல் ஆக. 14 வரை நடத்தப்படும் 14ஆவது புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக கல்வித் துறையில் கடந்த ஓர் ஆண்டாக, பல முக்கியத் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களில் புதிய பாடத் திட்டத்தைக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகத்தில் மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
Comments
Post a Comment