ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள புதிய சேவை
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள ஆதார் ஆணையம் வங்கிக் கணக்குகள் போன்று பின் (PIN) எனப்படும் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது.
நிலையில்லாத முகவரியை உடைய வாடகை வீட்டுதாரர்கள், பணியிடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் முகவரி மாறிக்கொண்டே இருப்பவர்கள் உள்ளிட்டோர் ஆதார் அட்டையில் தங்கள் முகவரி மாற்ற நடவடிக்கையின் போது சிரமங்களை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதுள்ள முறைப்படி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவரி ஆவணங்களை தொடர்புடைய அதிகாரிகளிடம் கொடுத்து விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் ஆதார் ஆணையம் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது. தொடர்புடையவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ரகசியக் குறியீட்டை பயன்படுத்தி தங்களது முகவரியை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
Sir please give me the pin number
ReplyDelete