வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 1





கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள் 

கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
1498 – கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார்.
1571 – உதுமானியர் சைப்பிரசைக் கைப்பற்றினர்.
1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன.
1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார்.
1759 – ஏழாண்டுப் போர்: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1774 – பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன் வளிமத்தைக் கண்டுபிடித்தார்.
1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
1801 – அமெரிக்கப் பாய்க்கப்பல் என்டர்பிரைசு லிபியாவில் திரிப்போலி என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.
1834 – பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894 – சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895) தொடங்கியது.
1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகத்து 9 வரை நீடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது.
1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் குவோமின்டாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1936 – பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் வார்சாவா நகரில் நாட்சி ஜெர்மனிக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1946 – நாட்சி ஜெர்மனியுடன் உறவு வைத்திருந்த உருசிய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மாஸ்கோவில் தூக்கிலிடப்பட்டனர்.
1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.
1960 – பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1960 – பாக்கித்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1966 – டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – புரூணையின் 29வது சுல்தானாக ஹஸனல் போல்கியா முடிசூடினார்.
1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.
1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
2004 – பரகுவை தலைநகர் அசுன்சியோனில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர்.
2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2008 – உலகின் இரண்டாவது பெரிய மலையான கே-2 கொடுமுடியில் 11 பன்னாட்டு மலையேறிகள் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54)
1744 – ஜீன் பாப்தித்தே லாமார்க், பிரான்சிய உயிரியலாளர், போர்வீரர் (இ. 1829)
1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861)
1818 – மரியா மிட்செல், அமெரிக்க வானியலாளர் (இ. 1889)
1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891)
1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930)
1876 – டைகர் வரதாச்சாரியார், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)
1881 – கா. சூரன், ஈழத்து சைவப் பெரியார் (இ. 1956)
1882 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1962)
1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (இ. 1966)
1899 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
1905 – எலன் சாயர் கோகு, அமெரிக்க-கனடிய வானியலாளர் (இ. 1993)
1907 – மறை. திருநாவுக்கரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1983)
1910 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])
1910 – முகமது நிசார், இந்தியத் துடுப்பாளர் (இ. 1963)
1924 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (இ. 2015)
1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிய அரசியல்வாதி (இ. 1979)
1930 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 2002)
1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972)
1935 – சோக்கல்லோ சண்முகநாதன், இலங்கை மேடை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர்
1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்
1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்
1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்
1952 – வி. ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி
1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்
1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்
1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை

சிறப்பு நாள்

விடுதலை நாள் (பெனின், பிரான்சிடம் இருந்து 1960)
வெற்றி நாள் (கம்போடியா, லாவோஸ், வியட்நாம்)
தேசிய நாள் (சுவிட்சர்லாந்து, 1291)

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்