ஒரு நபர் குழுவில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
01.08.2018 இன்று ஒரு நபர் ஊதியக் குழு தலைவர்- நிதித்துறை செயலாளார் ( செலவினம்) மதிப்புமிகு.சித்திக் இஆப அவர்களை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக சந்தித்து ஊதிய முரண்பாடுகளை களைதல் சார்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இன்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவின் முன் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில தலைவர் திரு.பரமசாமி அவர்கள் தலைமையில் பொதுச்செயலாளர் திரு.பி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
💥💥 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஆசிரியர்களிடம் உள்ள ஊதிய ஏற்றத்தாழ்வை சீராக்க வேண்டும்
💥💥2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பணிக்காலத்தை பணி நாளாக வரைமுறை செய்யவும்.
💥💥 *CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும்.
💥💥 *தேர்வுநிலை பெறும் ஆசிரியர்களுக்கு ( Pay matrix level) லெவல் மாற்றம் செய்ய வேண்டும்.
💥💥 *1-1 - 2011 முன்னர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் pp 750 வழங்க வேண்டும்.
💥💥 *கிராமப் பகுதிகளில் HRA மிகவும் குறைவாக உள்ளது , அதை மாற்றி அமைக்க வேண்டும்.
Comments
Post a Comment