Whatsapp's Latest 10 Updates?

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி,
இந்தியாவில் உள்ள 200மில்லியனுக்கும் அதிகமான தனது பயனர்களுக்காக புதிய வசதியை பரிசோதித்து வருகிறது.


வாட்ஸ்ஆப் பார்வேர்டு வசதிக்கு இந்தியாவில் கட்டுப்பாடு

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, இந்தியாவில் உள்ள 200மில்லியனுக்கும் அதிகமான தனது பயனர்களுக்காக புதிய வசதியை பரிசோதித்து வருகிறது. தனது தளத்தில் பரவும் அச்சுறுத்துட்டும் வதந்திகள்/தவறான தகவல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு, இந்த புதிய வசதியில் பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். வாட்ஸ்ஆப் செயலியில் வரும் இந்த மாற்றங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே காணலாம்.

'குயிக் பார்வேர்டு' பட்டன் நீக்கம்

இந்த வசதியின் ஒரு பகுதியாக, ஃசேட்டின் உள்ளே மீடியா பைல்(போட்டோ, வீடியோ அல்லது ஜிப்) பட்டன் அருகில் இருக்கும் 'குயிக் பார்வேர்டு' பட்டனை வாட்ஸ்ஆப் நீக்கவுள்ளது.

இந்தியாவில் மட்டும்

பார்வேர்டு மெசேஜ் அனுப்பும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கும் இந்த புதிய வசதியான இப்போதைக்கு இந்தியாவில் மட்டும் வெளியிடப்படுகிறது.


20 பார்வேர்ட் மெசேஜ்

வாட்ஸ்ஆப் செயலியின் உலக பதிப்பில், மற்ற குழுக்களுக்கு பார்வேர்டு செய்யும் மெசேஜ்களின் எண்ணிக்கை 20 என அந்நிறுவனம் கூறியுள்ளது.


முதலில் பீட்டா பதிப்பு


முதலில் இந்த வசதி ஆண்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கும் என வாட்ஸ்ஆப் கூறியுள்ளது. அதன் பின்னர், மற்ற பயனர்களுக்கு வெளியிடப்படும்.


சர்வர் சைட் மாற்றமில்லை


இந்த புதிய வசதியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் சர்வர் சைட் அப்டேட் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் சாதாரண ஆப் அப்டேட்டாக பீட்டா அல்லாத பயனர்களுக்கு இவ்வசதி கிடைக்கும்.


குரூப் சாட்டிற்கு இது பொருந்துமா?


இந்த வசதி எவ்வாறு செயல்படும் என பொறுத்திருந்து பார்க்கவேண்டும். புதிய வசதி தனி சாட் அல்லது க்ரூப் சாட் அல்லது இரண்டிற்கும் பொருந்துமா என தெளிவாக தெரியவில்லை.


இந்தியாவில் அதிக பார்வேர்டு மெசேஜ்


மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தான் மக்கள் அதிகமாக மெசேஜ், போட்டோ மற்றும் வீடியோக்களை பார்வேர்ட் செய்கிறார்கள் என வாட்ஸ்ஆப் நிறுவனம் என ப்ளாக்கில் பதிவிட்டுள்ளது.


வாட்ஸ்ஆப் லேபிள் வசதியின் தொடர்ச்சி


வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் 'லேபிள்' வசதியின் ஒரு பகுதியாக இந்த வசதியும் கிடைக்கும். முற்றிலும் புதிய வசதியான லேபிள்-ல், வாட்ஸ்ஆப் பயனர்கள் ஒரு மெசேஜை பார்வேர்டு செய்யும் போது, மெசேஜின் மேல் பகுதியில் 'பார்வேர்டேட்'(forwarded)என்னும் வார்த்தை இருக்கும்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!