School Morning Prayer Activities - 18.07.2018 ( asiriyar.com Daily Updates... )


School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

பழமொழி :

A liar is not believed when he speaks the truth

பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை

பொன்மொழி:

ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.

-அரிஸ்டாட்டில்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
சகுந்தலா தேவி

2.மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
யாமினி

நீதிக்கதை :

சிங்கமும் கரடியும் குள்ளநரியும்
(The Lion, the Bear & the Fox Story)


அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ஒரு காட்டுக்கு சென்று விட்டன. இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது.


 அந்த காட்டில் வாழ்ந்த சிங்கமும் கரடியும் ஒரு ஒப்பந்தம் செய்தன. சிங்கம் கரடியிடம், "நாம் இருவரும் ஒன்றாக வேட்டையாடி இரையை சமமாக பிரித்துக் கொள்வோமா?" என்றது. கரடியும் சம்மதம் தெரிவித்தது.

ஒருநாள் சிங்கமும் கரடியும் வேட்டைக்குச் செல்லும்போது, வழி தவறிய கால் உடைந்த மான் குட்டி ஒன்று வழியில் அமர்ந்திருபதைப் பார்த்தன. சிங்கத்திற்கும் கரடிக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஏனெனில் சிங்கமும் கரடியும் உணவு சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது.

சிங்கமோ அந்த மானின் வயிற்றுப்பகுதி எனக்கு தான் என்றது. கரடியோ "இல்லை இல்லை அதன் வயிற்றுப்பகுதி எனக்கு தான்" என்றது. மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை செய்தன. வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன.

அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது. அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஒடிவிட்டது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன.

இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன.

நீதி: வீண் சண்டை என்றும் இரு தரப்பினருக்கும் தீமையாகும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.பொறியியல் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

2.ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி?: விசாரணை ஆணையம் தகவல்.
3.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

4.பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம்: நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா? ராமதாஸ் கேள்வி.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்