School Morning Prayer Activities - 06.07.2018 ( Daily Updates... )
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
பழமொழி :
A friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
பொன்மொழி:
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம். -அன்னை தெரசா
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1..பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
2.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
நீதிக்கதை :
தோட்டக்காரனும் குரங்கும் | The Gardener and the Monkeys
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர் ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.
இன்றைய செய்தி துளிகள் :
1. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை..... நீட் பயிற்சி வகுப்பு நடத்தினால் அங்கீகாரம் ரத்து.
2.மதுரை தோப்பூரில் துணை கோள் நகரம் அமைய உள்ளதாக பேரவையில் முதல்வர் அறிவிப்பு
3.ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு
4.தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது
5.இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், லோகேஷ் ராகுலின் அதிரடி சதத்தால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
Comments
Post a Comment