How to apply for passport on mobile using mPassport Seva app: Step-by-step guide

ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்...





 மத்திய அரசு சமீபத்தில், எம் பாஸ்போர்ட் சேவா செயலியில் புதிதாய் பாஸ்ட்போர்ட் பெறுவோர் விண்ணப்பிப்பதற்கான சேவையை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்துக்கொள்ளுங்கள்.

1. இலவசமாக வழங்கப்படும் எம் பாஸ்போர்ட் சேவா செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.

2. செயலி திறந்ததும், திரையில் தோன்றும் புதிய பயனர் பதிவு (New User Registration) ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் உங்களது தகவல்களை பதிவிடவும்.

3. இனி செயலியில் உங்களது முழு விவரங்கள் அதாவது, பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பதிவிடவும்.

4. உங்களுக்கான பிரத்யேக லாக் இன் குறியீடு தேர்வு செய்து, அதனை உறுதி செய்து பாஸ்வொர்ட்டை பதிவிட வேண்டும். மின்னஞ்சல் லாக் இன் குறியீட்டை கூட செயலியில் பயன்படுத்தலாம்.

5. பாஸ்வேர்டு ரீசெட் செய்வதற்கான பாதுகாப்பு கேள்வி மற்றும் பதில்களையும் பாதுகாப்பு கருதி செட் செய்யவும்.

6. பின்னர் வெரிஃபிகேஷன் கோட்டை டைப் செய்து சப்மிட் பட்டனை க்ளிக் செய்யவும்.பின்னர் உங்கள் மின்னஞசல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்படும்.

7. அக்கவுன்ட் வெரிஃபிகேஷன் மின்னஞ்சலில் வரும் வெரிஃபிகேஷன் லின்க்-ஐ க்ளிக் செய்து, உங்களின் லாக் இன் ஐடியை பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

8. செயலியை ரீஸ்டார்ட் செய்ய எக்சிஸ்டிங் யூசர் பட்டனை க்ளிக் செய்து லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.


 9. அடுத்து பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்து, திரையில் தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.

10. விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்திக் கொண்டு பாஸ்போர்ட் பெற ஆவணங்களை சரிபார்க்க அனுமதி பெற வேண்டும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்