DD யில் இனி பெயர் கட்டாயம்!

டி.டி-க்கும் வச்சாச்சு செக்கு...



பெயர் கடடிமான்ட் டிராஃபட் (DEMAND DRAFT) எனப்படும் கேட்பு வரைவோலைகளில் வாங்குபவர்களின் பெயர் இடம் பெறுவது வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி, கேட்பு வரைவோலைகளில் வாங்குபவர்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது யாருக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்ற விவரம் கேட்பு வரைவோலைகளில் இடம் பெறும்.

அதேநேரத்தில், யார் அந்த டி.டி-யை வங்கியில் பணம் செலுத்தி பெற்றார்கள் என்ற பெயர் கட்டாயம் இல்லை. இதனால், யார் வேண்டுமானாலும் என்ன பெயரில் வேண்டுமானாலும் டி.டி-யை வாங்கிக்கொள்ளலாம்.

செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து வங்கியில் டி.டி வாங்குபவர் பெயர், கணக்கு விவரம் உள்ளிட்டவை கட்டாயம் கொடுக்க வேண்டும். மேலும் பே ஆர்டர்கள் உள்ளிட்டவற்றிலும் வாங்குபவர்கள் பெயரை கட்டாயம் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஒய்சி (KYC) எனப்படும் வாடிக்கையாளர் தகவல் அறியும் விதிகளில் ரிசர்வ் வங்கி பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை தடுக்கும் நோக்கிலான அம்சங்களும் இவ்விதிமுறைகளில் இடம் பெற்றுள்ளன.

Comments