தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனியார் பள்ளியை மிஞ்சி சாதனை!!
தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனியாரை மிஞ்சி சாதனை
வேலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்வித்r தரத்தை உயர்த்தி, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது
வேலுார் மாவட்டம், வாலாஜாப்பேட்டை ஒன்றியம், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் பூண்டி
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, கல்வி தரத்தில், சத்தமில்லாமல் சாதனை படைத்து, தேசிய விருதுக்கு தகுதி பெற்றுள்ளது
இங்கு, ஆங்கில வழியில் மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 121 மாணவர்களும், 121 மாணவியரும், என, 242 பேர் படிக்கின்றனர்
வகுப்பறைகள் துாய்மையாக உள்ளன. சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது
ஐ.டி., கார்டு, டை, பெல்ட், ஷூ அணிந்து, நாள்தோறும் மாணவர்கள் வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கிறது. அதிக சுமை இல்லாமல் இருப்பதற்காக, வகுப்பறைகளிலேயே கையேடுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
காலை, 9:15 மணிக்கு, பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது. இதில், நாட்டு நடப்புகள் குறித்து, மாணவர்களே எடுத்துரைக்கின்றனர்
தொடர்ந்து, பொது அறிவு, தமிழ், ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புமற்றும் ஆங்கிலத்தை சரளமாக பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது
பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை கூறியதாவது:கடந்த, 2014ல், இங்கு பொறுப்பேற்றேன்
அப்போது, 140 மாணவர்கள் படித்து வந்தனர். ஊராட்சி தலைவர் பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கிராம கல்விக் குழுவினருடன், பள்ளி வளர்ச்சி குறித்து பேசினேன்
பள்ளியில் இருந்த பாழடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு, முட்புதர்கள் அடியோடு அகற்றப்பட்டன. வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டன
சுற்றுச்சூழல் மற்றும் வகுப்பறைகள் சுத்தத்துக்கு, மாணவர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.சுமார், 4 கி.மீ., சுற்றளவில் இருந்து, ஆட்டோவில் வந்து, மாணவர்கள் படித்து விட்டுச் செல்கின்றனர்
வாரம்தோறும் மாணவர் மன்றத்தில், பல்வேறு தகவல்கள் கற்பிக்கப்படுகிறது. கிராம மக்கள் மற்றும் சக ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்புடன், பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது
வாலாஜா வட்டார கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள், எங்கள் பள்ளியை ஆய்வு செய்தனர்.
அவர்களது பரிந்துரையோடு, 2017- - 18ம் கல்வி ஆண்டு, சிறந்த பள்ளிக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
Comments
Post a Comment