கற்றல் கொண்டாட்டம் ஆசிரியர் கூடல்குழந்தைகளிடையே வாசிப்பினை அதிகப்படுத்த ஆரம்பத்தில் ஒரு திட்டமாகவும் தொடர்ச்சியாக ஒரு இயக்கமாகவும் மாற்றும் முயற்சியில் புக்ஸ் ஃபார் சில்ரன் & பாரதி புத்தகாலயம் முன்னெடுப்பில் ஆசிரியர்கள் பலரின் முயற்சியில் முதல் கூட்டம் சென்னை IBEA, நுங்கம்பாக்கத்தில் இனிதே துவங்கியது.

ஆயிஷா நடராசன் கடலூரில் மேற்கொண்ட வாசிப்பு முயற்சிகள் பற்றி விவரித்தார். பள்ளிகளை எப்படி அனுகுவது, நிகழ்விற்கு முன்னர் என்ன செய்யவேண்டும், பள்ளி மாணவர்களை எப்படி தயாரிப்பது, ஏற்பாடுகள் என்னஎன பட்டியலிட்டார்.

நிகழ்வினை தன் உரையின் மூலம் ஆரம்பித்துவைத்தார். பின்னர் சா.மாடசாமி ஐயா ஆசிரியர்களே தன் நம்பிக்கை என்று உரையை நிகழ்த்தினார். ஆசிரியர்களும் ஆசிரியர்கள் உருவாக்கப்போகும் நூலகங்களே மாற்றத்திற்கான விதை என்றார். பாடபுத்தகங்களில் இருக்கும் மொழி பற்றியும் குறிப்பிட்டார். ஆசிரியர்களை உற்சாகமூட்டும் உரை. வந்திருந்த ஆசிரியர்களும் நண்பர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.  சேதுராமன் ‘மந்திரமா தந்திரமா’ என்ற வகுப்பினை எடுத்து அசத்தினார். அரங்கத்தினர் எல்லோரும் மனம்விட்டு சிரித்து மகிழ்ந்தனர்.

பல அசத்தும் தந்திரங்களை ஆசிரியர்களை வைத்து நிகழ்த்தினார். பின்னர் ‘கதை சொல்லல்’ என்ற தலைப்பில் சாலை செல்வம் அருமையான கலந்துரையாடல் நிகழ்த்தினர். கதை ஏன் சொல்லவேண்டும் அதன் கூறுகள் பற்றி விவரித்தார்.மதியம் மதுரை சரவணன் நூல்களை எப்படி அறிமுகம் செய்வது குறித்து illustrious உரை. தன் வகுப்பில் எப்படி கதை சொல்வாரோ அப்படியே முன்னே இருப்பவர்களை குழந்தைகளாக மாற்றினார்.


அதனைத்தொடர்ந்து கலகலவகுப்பறை சிவா குறும்படம் மூலம் உரையாடல் நிகழ்த்துவது எப்படி என பேசினார். உருக்கமான சில சம்பவங்களையும் குறும்படங்களையும் குறிப்பிட்டார்.பாடநூல்களை பற்றியும் சில விமர்சனங்களையும் முன் வைத்தார். ப்ரியசகியும் சகாவும் சேர்ந்து கதை சொன்னார்கள். மதுரை மொ.பாண்டியராஜன் ஒரிகமியை கற்றுக்கொடுத்தார்.மதிய இடைவேளைக்கு முன்னர் கலகலவகுப்பறை சிவாவின் ‘சீருடை’ புத்தகத்தை நான் வெளியிட எழுத்தாளர் ஜெயஸ்ரீ பெற்றுக்கொண்டார்.ஒரு மிக நல்ல துவக்கம். இது ஆசிரியர்களின் முன்னெடுப்பால் மட்டுமே சாத்தியப்படும். நிறைய நிறைய யோசனைகள் தேவைப்படுகின்றன.

ஒரே மாதிரி எல்லா இடங்களிலும் செய்ய இயலாது ஒவ்வொரு இடங்களிலும் தனித்துவத்துடனே செய்ய இயலும். ஆனால் நோக்கம் வாசிப்பினை அதிகப்படுத்த வேண்டும், முதலில் ஆசிரியர்களும் பரவலாக வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்- விழியன்

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!