கற்பூர வல்லி அலைஸ் ஓமவல்லி இலையின் பயன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...
கற்பூரவல்லி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடி. பெரிய பாராமரிப்புகள் எதுவுமின்றி எளிதில் வளரக்கூடிய இச்செடியின் பயன்களை காண்போம்.
பொதுவாக இது ஒரு கிருமி நாசினி
காய்ச்சல், சளி, தலைவலிக்கு அருமருந்து
இத்தாவரம் வியர்வை உண்டாக்கும் தன்மை கொண்டது
இதன் சாறு எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க மழலையின் இருமல் குணமாகும்.
இதன் சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்
இது குழந்தைகளின் அஜீரணம் போக்கும் குணம் கொண்டது.
இது மட்டும் அல்லாமல் மருத்துவ துறையில் இந்த கற்பூரவல்லி பெரும் பங்காற்றி வருகிறது. இளைப்பு, வயிறு சம்பந்தமான நோய், கண் அழற்சி மற்றும் நரம்புகளுக்கு சத்து தரும் மருந்தாகிறது.
இவ்வளவு பயன் அளிக்கும் இந்தச் செடியை வளர்ப்பது அப்படியொன்றும் கஷ்டமான காரியமில்லை. இதன் தண்டை எடுத்து ஒரு சிறு தொட்டியில் நட்டாலே போதும், நன்கு புதர் போல வளரும்.
கற்பூர வல்லியை இலையப் பயன்படுத்தி ரசம் வைக்கலாம், பஜ்ஜி போடலாம், இலையை அப்படியே சூடான தோசைக்கல் மேல் சற்று நேரம் வைத்துக் கசக்கிச் சாறெடுத்தும் அருந்தலாம்.
கற்பூரவல்லி கஷாயம் செய்வது எப்படி?
சிறு குழந்தைகளுக்கு எனில் ஒரே ஒரு சிற்றிலை போதும் அதை வாட்டி கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி சங்கில் ஊற்றி புகட்டலாம்.
பெரியவர்களுக்கு எனில் 2 அல்லது 3 இலைகளை எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். வறட்டு இருமலுக்கு சரியான மருந்து.
Comments
Post a Comment