இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது


நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று இனி மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. கணினி சாப்ட்வேர் உதவியுடன் புதிய வடிவிலான கேள்வித்தாள் வரும் டிசம்பரில் நடக்கும் ‘நெட்’ தேர்வில் அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதற்கான தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது.

இதில் நீட், ஜெஇஇ மெயின், யுஜிசி மெயின், ஜிமாட், ஜிபாட், ஜிமெயின், நெட் உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும். நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே என ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. பயிற்சி மையங்கள், பழைய கேள்வித்தாள்களை கொண்டும், கேள்வி-பதில்களை மட்டும் மனப்பாடம் செய்தும் படிக்கின்றவர்களுக்கு புதிய தேர்வு முறை பயன்தராது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நெட் தேர்வில் புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன் சிறப்புகள் தொடர்பாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

* மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு (நீட்), பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு (ஜெஇஇ), கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு (நெட்) ஆகியவற்றை எழுதுகின்ற மாணவ மாணவியருக்கு இனி தனித்தனி கேள்வித்தாள் இடம்பெறும். ஒன்று போல் மற்றொன்று அமையாது.

* தேசிய தேர்வு முகமை வரும் டிசம்பரில் நடத்துகின்ற ‘நெட்’ தேர்வில் இந்த புதிய முறையை கொண்டுவர உள்ளது. இந்த தேர்வு எழுதுவோருக்கு தனித்தனி கேள்வித்தாள் கிடைக்க செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

* பொதுவாக ஒன்று முதல் நான்கு வரையான கேள்வித்தாள் தயார் செய்து மாற்றி மாற்றி வழங்குவதை விட்டுவிட்டு லட்சக்கணக்கில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு இதில் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உதவியுடன் ஒவ்வொரு தேர்வருக்கும் தனித்தனி கேள்வித்தாள் தயார் செய்து வழங்கப்படும்.

* கேள்வித்தாள் தயார் செய்யப்படுவதற்காக ஓராண்டுகாலம் வரை செலவிடப்படும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சாப்ட்வேர், வினாத்தாளில் ரகசிய குறியீடுகள் போன்றவையும் வினாத்தாள் வெளியாவதை தடுக்கும் வகையில் இருக்கும்.

* கேள்விகள், பதில்கள் தயார் செய்ய சாப்ட்வேர் உதவி நாடப்படும். சிலபஸ் முழுவதும் படிக்காமல் கேள்வி பதில்களை மட்டும் படிக்கின்ற மாணவர்கள், தேர்வு மையங்களின் தீவிர பயிற்சியை மட்டும் நம்பியுள்ள மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை பெரும் சவாலாக அமையும்.

* தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கேள்விக்கு ஒன்றுபோல் உள்ள பல விடைகள் வழங்கப்படும். அவற்றின் இருந்து சரியானதை தேர்ந்ெதடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் முழுமையான சிலபஸ் படித்த மாணவர்கள் மட்டுமே தேர்வுகளில் ஜொலிக்க இயலும். இவ்வாறு உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!