உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மனோன்மணீயம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டு முதல் டி.பார்ம் பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தாக்க வேதியியல் துறையில் இந்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு மருந்தியல் பட்டயப் படிப்பு (டி.பார்ம்) தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிப் பேராசிரியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, விண்ணப்பப் பதிவிறக்கம், விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில்(www.msuniv.ac.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்