பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஆன்லைன் ரசீது

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான, பழைய ஓய்வூதிய திட்டம், 2004ல் நிறுத்தப்பட்டு, புதிதாக சேர்வோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.இத்திட்டத்தில், இடம் பெற்றவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததற்கு ரசீது வழங் கா மலும், பணப்பயன் கிடைக்காமலும் இருந்தது.

எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய, ஆசிரி யர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், பங்களிப்பு திட்ட விபரங்கள் அனைத்தும், தமிழக அரசின் கருவூலத்துறை சார்பில், ஆன்லைனில் இணைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைனில் ரசீது வழங்கப்படும் என, கருவூலத்துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்