ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது

'அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஊரக பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மேல் படிப்பு உதவி தொகையாக, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்.ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும், தலா, 50, மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்விற்கு, நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 


நடப்பு கல்வி ஆண்டுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23 காலை, 10:00 முதல், பிற்பகல், 12:30 மணி வரை நடைபெறும்.இந்த தேர்வுக்கு, அந்தந்த பள்ளி வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், ௧ லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, வருமான சான்றிதழ் பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, சேவை கட்டணத்துடன், 10 ரூபாய் கட்டணத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தர வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்