TNPSC - குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 37-ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு








தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது வரம்பை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி, பி.சி., எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பு 35-லிருந்து 37-ஆகவும், இதர பிரிவனருக்கு 30-லிருந்து 32-ஆகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப கட்டடம்

கோயம்புத்தூரில் ரூ.100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் திருச்சியில்​ ரூ.40  கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

மாதிரி பள்ளிகள்

32 மாவட்டங்களில் ரூ.16 கோடியில் மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வன அலுவலர்களுக்கு பயிற்சி

ரூ.2 கோடியில் வனத்துறை அலுவலர்களுக்கு காட்டுத்தீ கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்து வன அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் கூறியுள்ளார். 

Comments