தலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் - CEO அட்வைஸ்!

கல்விக்கு இணையாக ஒழுக்கத்தை முதலில் கற்றுத்தர வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.


 திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி பேசியதாவது:

மாணவர்களுக்கு, கல்விக்கு இணையாக ஒழுக்கத்தை முதலில் கற்றுத்தர வேண்டும். 'நீட்', ஜே.இ.இ., ஐ.ஐ.டி., தேர்வுகளுக்கு இப்போதிருந்தே மாணவர்களை தயார்படுத்துவது அவசியம்.ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ஐந்து மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பொதுத்தேர்வில், கூடுதல் தேர்ச்சி விகிதம் பெற, அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

Comments