ஆசிரியர் பகவான் புதிய பள்ளிக்கு மாற்றம் - CEO அறிவிப்பு


திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக வைத்துவிட்டது.

இடமாறுதல் ரத்தாகுமா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, ``மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது.

 இதனால்தான் அவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். கவுன்சலிங் மூலம் அவர்களுக்குப் புதிய பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் உள்ளார். மாணவ, மாணவிகள் போராட்டத்தால் ஆசிரியர் பகவான் உடனடியாக விடுவிக்கப்படவில்லை. 

மாணவ, மாணவிகளை சமரசப்படுத்திவிட்டு அவரை அங்கிருந்து விடுவிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். 


அதற்காக மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் பேசிவருகின்றனர். இதனால், இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான், கவுன்சலிங்கில் தேர்வு செய்த அருங்குளம் பள்ளிக்கு இடமாற்றப்படுவார். 

ஆசிரியை சுகுணா, ஏற்கெனவே இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் விதிப்படிதான் இடமாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Comments