ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி! திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவர்களின் பாசப்போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என நேற்று முன்தினம் மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று பணிமாறுதல் உத்தரவை பெற வந்த ஆசிரியர் பகாவனை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுததுடன் ஆசிரியரை பிரிய மனமில்லா மாணவர், மாணவிகள் கண்ணீருடன் வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டாம், இங்கேயே பணியாற்ற வேண்டும்.

நீங்கள் பாடம் நடத்தினால் அனைவரும் தேர்ச்சி பெறும் என வேண்டுகோள் விடுத்தனர். அப்போது மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுததும், மாணவ, மாணவிகளின் கண்ணீரை கண்ட ஆசிரியரும் கண்கலங்கி அழுத காட்சி காண்போரை மனம் உருகச் செய்யது.
பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸார் செயவதறியமால் திகைத்தனர்.

இந்நிலையில், ஆங்கில ஆசிரியர் பகவானின் பணி மாறுதல் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகt மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments