ஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்சர் செங்கோட்டையன்


தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்


11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

மேலும் அவர் கூறும் போது, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது


6, 7 மற்றும் 8 வகுப்பில் புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*

*நாமக்கல் மாவட்டட்த்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, எளையாம்பாளையத்தில் நடைபெற்றது.*

*இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.*

*இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Comments