மனசாட்சியில்லாத சிலர் ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி செய்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வரும் நிலையில், புகார்கள் தெரிவிக்கப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின்விசை சக்கரம் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் கலந்தாய்வில் மனசாட்சியில்லாத சிலர் குளறுபடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

Comments

Post a Comment