பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.

இப்பள்ளிகளில் 2003 பிப்., வரை இடைநிலை ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அதன்பின் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர் போராட்டத்தையடுத்து தமிழ் பாடத்திற்கு 66.6 சதவீதம், மற்ற பாடங்களுக்கு 50 சதவீதம் என, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 21 ல் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை என கூறி, கலந்தாய்வை நிறுத்திவிட்டனர்.தவறான விதிமுறை மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததால் இப்பிரச்னை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கனவாகிவிட்டது. இதன்மூலம் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொகுப்பூதியத்தில் நியமனமான 42 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 2006 ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.அப்போதே 50 சதவீத இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.இதேபோல் அரசுஉதவி பெறும் பள்ளிகளிலும் பதவி உயர்வின்றி 13 ஆயிரம் பேர் தவிக்கின்றனர், என்றார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்