அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு


ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள சீருடை, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தென் மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் இருப்பதாகவும், வடமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார். இதனால் பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்

Comments