தனியார் பள்ளி மீதான மோகத்தைக் குறைக்க அரசு முயன்றுவருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்


''பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த மே 2-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவருகிறது; இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என தி.மு.க எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

‘‘
இதற்குப் பதிலளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஆங்கில மோகத்தால் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுவருகிறது. ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்கி தனியார் பள்ளி மீதான மோகத்தைக் குறைக்க அரசு முயன்றுவருகிறது. மேலும், மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது'' என்று விளக்கம் அளித்தார்.

Comments