தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்ப தேதி அறிவிப்பு

 'தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சகத்தின், www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில், வரும், 30க்குள், விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்