உபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா?


  • 150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்






பணியிடங்கள் போதும் என்ற கணக்கீட்டில் மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 5 வகுப்புகள்  உள்ளன.

ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன.

ஒரு ஆசிரியர் 4 பாடங்கள் வீதம் 28 பாடவேளைகள்  பாடம் நடத்துவார்.
தலைமையாசிரியர் ஒரு பாடத்திற்கு 7 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.

ஆக மொத்தம் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் சேர்ந்து 21 பாடங்கள் நடத்துவர்.
மீதமுள்ள 4 பாடங்களுக்கான (4 x 7 = 28) பாடவேளைகளை மாணவர்களுக்கு யார் நடத்துவார்?

நகர்ப்புறங்களை விட்டு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.

மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது.

அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இல்லை.

கல்வி இணைச்செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளி மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை.

மேலும் பள்ளிசார்ந்த எல்லா வகையான (அலுவலகப்பணி, கருவூலகப்பணி, கடிதங்களை நேரில் கல்வி அலுவலங்களில் ஒப்படைத்தல் பணி, இன்ன பிற) பணிகளையும் இவ்வாசிரியர்களே செய்யவேண்டும்.

அதனால் மாணவர்களின் கற்றல் பணியில் தொய்வு ஏற்படுகிறது

எனவே, மாணவர்கள் கல்வி கற்கும் பணி தொய்வடையாமல் இருக்க வேண்டும் எனில்
150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்களும்,
ஒரு தலைமையாசிரியரும்,
ஒரு உடற்கல்வி ஆசிரியரும்,
ஒரு இளநிலை உதவியாளரும்,
ஒரு ஆய்வக உதவியாளரும்,
ஒரு அலுவலக உதவியாளரும்,
ஒரு இரவுக்காவலரும் கட்டாயம் தேவை.

ஏழை கிராமப்புற மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் கோரிக்கையை, தேவையை, அவசியத்தை இவ்வரசு பரிசீலிக்க வேண்டும்.
சிவ. ரவிகுமார்
99944453649

Comments

Post a Comment