நீட்' தேர்வு: நாளை, 'ரிசல்ட்

தமிழகத்தில், ஒரு லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு
முழுவதும், 13 லட்சம் பேர் எழுதிய, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.


 பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - இயற்கை மருத்துவம் போன்றவற்றில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

 சில அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், நீட் தரவரிசையை பின்பற்றியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது

. இந்த ஆண்டு, புதிய மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது. இந்த தேர்வில், நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 1.07 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர்.

அவர்களில், 24 ஆயிரம் பேர், தமிழில் எழுதினர். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழுடன் சேர்த்து, 11 மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது.

 இந்தத் தேர்வின், விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை, ஒரு வாரத்திற்கு முன், சி.பி.எஸ்.இ., வெளியிட்டது. அதில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்து, விடைத்தாள் திருத்தம் நிறைவுக்கு வந்துள்ளது

. இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.

 தேர்வு முடிவுகள் வெளியாவதை தொடர்ந்து, வரும், 8ம் தேதிக்குள், நீட் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதேபோல், 'ஆயுஷ்' என்ற இந்திய மருத்துவ படிப்புகளான, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கும், இந்த ஆண்டு முதல், நீட் மதிப்பெண் அடிப்படை  யிலேயே, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!