பெண் ஊழியர்கள் பிரசவ விடுப்புக்கு புதிய உத்தரவு : அரசு ஆணை வெளியீடு
'முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் இரண்டாவது பிரசவத்திற்கும் 9 மாத பிரசவ விடுமுறை வழங்கலாம்' என அரசு செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்பை 270 நாட்களாக உயர்த்தியது. இந்த உத்தரவை மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன.ஒருசில பெண்களுக்கு முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தை பிறக்கின்றன.
இதனால் இரண்டாவது பிரசவத்திற்கான மகப்பேறு விடுப்பு பெண் ஊழியர்களுக்கு மறுக்கப்படுவதாக பிரச்னை எழுத்தது.இதையடுத்து தமிழக அரசு செயலர் ஸ்வர்ணா, ''முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கலாம்' என உத்தரவு பிறப்பித்துஉள்ளார்.
Comments
Post a Comment