கல்வித்துறையில் கோலோச்சும் பணியிடங்களை கைப்பற்ற போட்டி : சிபாரிசு மழையால் திணறல்

கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர்
(பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, மூன்று ஆண்டுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சி.இ.ஓ., பி.ஏ.,, உதவி திட்ட அலுவலர் (எஸ்.எஸ்.ஏ., - ஏ.பி.ஓ.,), திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆர்.எம்.எஸ்.ஏ., - ஏ.டி.பி.சி.,), சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) ஆகியோர் கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்று, பள்ளிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள், நேற்று முதல் கலந்தாய்வில் பங்கேற்று தலைமையாசிரியராக பள்ளிக்கு மீண்டும் மாறுதல் பெறுகின்றனர். காலியாகும் இடங்களுக்கு நியமனம் செய்ய வழிகாட்டுதல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதிகாரிகள் போல் கோலோச்சும் இப்பணியிடங்களை கைப்பற்ற சி.இ.ஓ., மற்றும் அரசியல்வாதிகள் சிபாரிசுகளை தலைமையாசிரியர் பெற்று வருகின்றனர். இதில் பேரம் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் போல் பி.ஏ.,க்கள் உள்ளிட்டோர் செயல்பட்டு கோலோச்சினர். முறைகேடுகள் நடந்தன. இதனால்தான் அவர்களை மாற்ற கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் நடவடிக்கை எடுத்தார்.

 தகுதி, திறமையுள்ளவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் இப்பதவிகளில் நியமிக்க வேண்டும். சிபாரிசு அடிப்படையில் நியமித்தால் மீண்டும் முறைகேடு நடக்கும், என்றனர்.

Comments

  1. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
    மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

    நாள்: 25/06/2018
    இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

    இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
    *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

    இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
    இப்போது தெரியபடுத்துகிறோம்.
    இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
    கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.

    2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
    17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
    எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.

    மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
    உறுதியாய் பணி பெறுவோம்....
    கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
    💥💥💥💥💥💥💥💥💥💥
    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

    இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465


    வடிவேல்சுந்தர்
    மாநில தலைவர்
    8012776142

    சிவக்குமார்
    மாநில செயலாளர்
    ( ஊடகபிரிவு)
    9626580103

    உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்