'அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது! புதிய வடிவில் கேள்வித்தாள்!!

'அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது! புதிய வடிவில் 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்
தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.




🌷 அதன் ஒரு பகுதியாக, இனி வரும் பொதுத்தேர்வுகளில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டால், அதற்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🌷பள்ளி கல்வித்துறை மூலமாக புதிய சுற்றறிக்கை, கடந்த திங்கள் அன்று வெளியிடப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும், 'பிரேயரில்' வாசிக்கப்பட்டு, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

🌷இச்சுற்றறிக்கையால், இனி தினமும் ஆசிரியர்களும் முழு பாடத்தையும் படிப்பதுடன், இணைய தளங்களில் விபரங்களை அறிந்தால் மட்டுமே, பணியை தக்க வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

*சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

🌷ஒட்டு மொத்த கல்வியை தரமானதாக்கும் நடவடிக்கைக்கு, ஆசிரியர் தயாராகிவிட வேண்டும்.

🌷முழுமையான பாடங்களை புரியும் படி நடத்துவதுடன், பாடங்களை கடந்தும் கற்பிக்க வேண்டும்.

🌷சாதாரண, கடினமான பாடங்களை, எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என, பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

🌷  *அதன்படி அதிக நேரம் பயிற்சி வழங்கி, தொடர்ந்து தேர்வு நடத்த வேண்டும்.

🌷கடந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு வினாத்தாள் போன்று, வரும் ஆண்டுகளிலும் புதிய, புதிய வடிவில் தான் வினாத்தாள் வரும்.

🌷வழக்கமாக, கடந்த, பத்தாண்டு வினாத்தாளை படிக்க வைத்து, தேர்வு எழுத வைத்தால், 40 முதல், 50 மதிப்பெண் கிடைக்கும் என பயன்படுத்த வேண்டாம்.

🌷 *ஒரு முறை வந்த வினாத்தாள் வடிவம், மீண்டும் வராது.

🌷'புளூ பிரிண்ட்' வழங்கப்பட மாட்டாது. * மாணவ, மாணவியர், 'புளு' அல்லது 'பிளாக்' என, ஏதாவது ஒரு நிற பேனாவால் மட்டும், தேர்வு பேப்பர் முழுவதும் எழுத வேண்டும். இரு நிறம் பயன்படுத்தக்கூடாது. பிற நிறங்களை வைத்து அலங்கரித்தல் தேவையற்றது.

🌷 'புக் பேக், புக் இன்டீரியர்' மற்றும் புத்தகத்தில் வரும், 'பார் கோட், இணைய தள லிங்க்'களை பயன்படுத்தி, ஆசிரியர்கள் கூடுதல் வகுப்பு நடத்த வேண்டும்.

🌷மாணவர்களே, அம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

🌷இதற்காக பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ், லேப்டாப், இணைய தள வசதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

🌷புத்தகத்தில் இருந்து, 80 மதிப்பெண் வரையிலும், இணைய தள பயன்பாடு மூலமான பயிற்சியில் இருந்து, 20 மதிப்பெண் வரை கேட்கப்படும்.

🌷இதனால், இனி வரும் வினாத்தாளில், 'அவுட் ஆப் சிலபஸ்' என்ற சலுகை மதிப்பெண் கிடையாது.

🌷ஒரு வினாவில், நான்கு, 'சாய்ஸ்'களில் (ஏ, பி, சி, டி), விடை எழுதும்போது, வினா எண், சாய்ஸ்க்கான ஏ, பி, சி, டி, என எதுவோ அதையும் சரியாக குறிப்பிட்டு, விடையையும் எழுத வேண்டும். இம்மூன்று சரியாக இருந்தால் மட்டுமே மார்க் வழங்கப்படும்.

🌷கணிதம், இயற்பியல், வேதியியலில் விதிகள், செய்முறை, வரைபடம், 'ஸ்டெப்'கள், விடையில் தெளிவு இருக்கும்படி பயிற்சி வழங்கி, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.

🌷தெரிந்த விடைகளை மட்டும் எழுத வேண்டும். விடைத்தாளை வீணாக்குதல், தேவையின்றி கூடுதல் விடைத்தாளை எழுதாமல் விட்டு வைத்தால், தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கும்.

🌷புதிய பாடத்திட்டம், இணையத்தில் படித்தல், புதிய வடிவில் வினாத்தாள் மற்றும் விடையளித்தல் முறையை, ஆறாம் வகுப்பு முதல் அமல்படுத்தி, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

🌷அதற்கு ஏற்ப, அரசு வழங்கும் வினாத்தாளுடன், ஆசிரியர்களும் புதிய வடிவில் வினாத்தாளை எடுத்து, விடை எழுத பயிற்சி தர வேண்டும்.

🌷பொதுத்தேர்வு வரை அவ்வப்போது வெளியாகும் உத்தரவுகளை, மாணவர்களுக்கும் தெரிவித்து, பயிற்சியை தொடர வேண்டும்.

🌷ஆய்வுக்கூட பயிற்சி, பிராக்டிக்கல் தேர்வு, அதற்கான நோட்டு, ஆவணங்கள் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும்.

🌷அவ்வாறு பராமரிப்பதுடன், சரியான முறையில் பிராக்டிக்கலை மாணவர் முடித்தால் மட்டும் முழு மதிப்பெண் தரப்படும். இதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

🌷இதுபோன்று, நான்கு பக்கம் விதிகள், வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

🌷 இதில், பள்ளிகள் கடைபிடிக்க வேண்டியவை, ஆசிரியர்களின் நடைமுறைகள் என பலவும் குறிப்பிட்டுள்ளதால், ஆசிரியர்கள் கிலியடைந்துள்ளனர்.


🌷'ரிசல்ட்' காட்ட வேண்டும் என நினைக்கும் பள்ளிகள், அதிகம் உழைப்பதுடன், திறமையான ஆசிரியர்களை தக்க வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்