BE - பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் இன்று வெளியாகும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும், ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிற்கும்போது ஒரே கட் ஆஃப் கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களை தரவரிசைபடுத்தவே ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர ஒரே கட் ஆஃப் கொண்ட மாணவர்களை தரவரிசைப்படுத்த முதலில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், கணித மதிப்பெண்ணும் ஒன்றாக இருந்தால், அடுத்ததாக இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், இயற்பியலிலும் ஒரே மதிப்பெண் இருந்தால் கணினி அறிவியல், உயிரியல் பொன்ற நான்காம் பாடம் கருத்தில் எடுக்கப்படும், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண் என்றால் வயது மூத்தவர்களுக்கு தரவரிசை பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்படும், வயது மற்றும் மதிப்பெண் ஒரே மாதிரி இருந்தால் கூடுதல் ரேண்டம் எண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments