குரூப் 4 தேர்வு முடிவுகள்: 10 நாள்களில் வெளியிட முடிவு
குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து கடந்த பிப்ரவரி 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 14-இல் வெளியிடப்பட்டது.
மொத்தம் 9,351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 10 நாள்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன
Comments
Post a Comment