ரூ.149-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்



ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ரூ.149 சலுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.


முன்னதாக மே மாத வாககில் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டு தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டது. மற்ற சேவைகளில் எவ்விதம மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பை விட புதிய மாற்றம் ஜியோ சலுகைக்கு போட்டியளிக்கும் வகையில் உள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

முன்னதாக ரூ.399 விலையில் வழங்கி வந்த சலுகையை ஏர்டெல் மாற்றியமைத்தது. இந்த சலுகையில் தற்சமயம் தினமும் 2.4 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் இது அனைவருக்கும் பொருந்தவில்லை... ஏனென்றால் 199யை பயனாளிகளக்கு இந்த ஆஃபர் கிடையாது...

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்