1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்!!!

மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது
. அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. 

அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.

இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.

செப்டம்பருக்குள், 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கt, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யவுள்ளனர். 

இதில், சேலத்தில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், ரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில், 2,800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது.

இதனால், அந்த எட்டு மாவட்டங்களில், கடந்த, 21ல் நடந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில், மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்