10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு

பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன.இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பல லட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. 

எனவே, 'ஆசிரியர்கள், தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை உயராவிட்டால், அந்த பள்ளிகளை மூடுவது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்டில் மாணவர் சேர்க்கை முடிய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு முன்னும், பின்னும் அறிக்கை தர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால், பள்ளிகள் மூடப் படுவதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்