ஒரே போனில் மூன்று வாட்ஸ்ஆப்(Whats App)- எப்படின்னு தெரியுமா?
ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு அல்லது மூன்று வாட்ஸ்ஆப் கூட மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அதற்கு தகுந்த பல்வேறு ஆப் வசதிகள் ஆன்லைனில் உள்ளது. மேலும் ஸ்மார்ட்போனில் இரண்டு அல்லது மூன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்தினால் உபயோகப் படுத்த சிறிது கடினமாக இருக்கும். இப்போது ஒரே போனில் மூன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படியென்று பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் வழியாக NoxApp+ -எனும் செயலியை பதிவிறக்கம் செய்தல் வேண்டும்,பின்பு அந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்.
வழிமுறை-2:
அடுத்து இந்த செயலியில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களும் காண்பிக்கப்படும், அதில் உங்கள் விருப்பான செயலியை தேர்வு செய்து clone- செய்ய முடியும். அதன்படி நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை மிக எளிமையாக clone செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமுறை-3:
NoxApp+ செயலியில் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை தேர்வு செய்தபின்பு create multi app எனும் ஆப்ஷனை கிளிக் செய்தல் வெண்டும்.
வழிமுறை-4:
அடுத்து NoxApp+ பகுதியில் உங்கள் இரண்டாவது வாட்ஸ்ஆப் இடம்பெறும், அவற்றில் உங்களின் புதிய மொபைல் எண் பதிவிட்டு பயன்படுத்த முடியும். பின்பு இந்த NoxApp+ -இருக்கும் இரண்டாவது வாட்ஆப் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனின் முன்பகுதிக்கு எளிமையாக கொண்டுவர முடியும், அதற்கு create shortcut எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-5:
மேலும் NoxApp+ செயலியில் மூன்றாவது வாட்ஸ்ஆப் கூடclone முறையில் பயன்படுத்த முடியும், பின்பு இந்த செயலியில் பேட்டன் லாக் வசதி உள்ளது. மேலும் நோட்டிபிக்கேஷன் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த NoxApp+ செயலி.
அப்டேட்:
வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட க்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment