TET - மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி

ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத பள்ளிக்கல்வித் துறை மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

இப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொடர்பு தொலைபேசி எண் ஆகியவற்றை குறி்ப்பிட்டு, விருப்பக் கடிதம் ஒன்றை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை -600006 என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். பயிற்சி நடக்கும்இடம் மற்றும் காலம் குறித்த தகவல்கள், சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத விரும்பும் பார்வையற்றோர் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்