அமேசான் அறிவித்தது "SUMMER SALE" - Online மூலம் மிகக்குறைந்த விலையில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கலாம்
பல்வேறு நிறுவனங்களின் தேர்வுசெய்யப்பட்ட லேப்டாப் மாடல்களுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் தற்சமயம் சம்மர் சேல் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது, மேலும் இந்த சிறப்பு சலுகையில் பல்வேறு மின்சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அதன்பின்பு பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் போட்டியாக அமேசான் சம்மர் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அமேசான் சம்மர் சேல் பொறுத்தவரை மே 13-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சிறப்பு சலுகையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 35சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான்:
இந்த அமேசான் சிறப்பு சலுகைகளில் பல்வேறு நிறுவனங்களின் சாதனங்களுக்கு விலை குறைப்பு, தள்ளுபடி, மாத தவனை முறை வசதி, கேஷ்பேக் மற்றும் எக்சேஞ்ச் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் சிறப்பு விற்பனை நாட்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பிரான்டுகளின் 40,000 டீல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பரிசுகள்:
வாடிக்கையாளர்கள் அமேசான் ஆப் வசதியை பயன்படுத்தினால் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும், அதன்பின்பு இந்த சிறப்பு விற்பனையில் கலந்துகொள்ளும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேப்டாப்:
பல்வேறு நிறுவனங்களின் தேர்வுசெய்யப்பட்ட லேப்டாப் மாடல்களுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணினி உதிரிபாகங்களுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூடூத் ஹெட்செட்:
ப்ளூடூத் ஹெட்செட் சாதனங்களுக்கு 35சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும், அதேபோன்று ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களுக்கு 80சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.
Comments
Post a Comment