SBI-ன் அதிரடி திட்டம்.. இனி ஜீரோ மினிமம்பேலன்ஸ் கணக்கை வீட்டில் இருந்தே திறக்கலாம்!




இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ 2018 ஆகஸ்ட் மாதம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் இல்லா சேமிப்பு கணக்குகளைத் திறக்கும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

யாரெல்லாம் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் சேமிப்பு கணக்கு வேண்டும் என்று உள்ளார்களோ அவர்களை எல்லாம் ஊக்குவிக்கும் எண்ணத்தில் எஸ்பிஐ இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்குத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டா சேமிப்பு கணக்கு
இன்ஸ்டா சேமிப்பு கணக்கு
எஸ்பிஐ வங்கி இன்ஸ்டா எனப்படும் உடனடி சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் வீட்டில் இருந்த படியே கணக்கைத் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது.
ஆனால் இந்தச் சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே ஆகும்.

எஸ்பிஐ யோனோ செயலி
எஸ்பிஐ யோனோ செயலி
எஸ்பிஐ வழங்கு இன்ஸ்டா சேமிப்புக் கணக்கினை எஸ்பிஐ-ன் யோனோ செயலியின் கீழ் திறக்க வேண்டும். எந்த ஒரு ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்காமல் பேப்பர் ஏதும் இல்லாமல் இந்தச் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.

உடனடி ஆக்டிவேஷன்
உடனடி ஆக்டிவேஷன்
எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்பு கணக்கானது உடனடியாக ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் யோனா செயலியின் அதிகாரப்பூர்வ இணையதளமாக sbiyono.sbi-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


டெபிட் கார்டு
டெபிட் கார்டு
எஸ்பிஐ இன்ஸ்டா சேவிங்ஸ் கணக்கு திறப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டு அளிக்கப்படும். பேமெண்ட்ஸ் வங்கிகள் போன்று 1,00,000 ரூபாய் வரை சேமிப்புக் கணக்கில் பணத்தினை நிர்வகிக்க முடியும். ஆண்டுக்கு 2,00,000 லட்சம் ரூபாய் பரிவர்த்தனி செய்ய முடியும்.


சாதாரணச் சேமிப்பு கணக்காக மாற்ற முடியுமா?
சாதாரணச் சேமிப்பு கணக்காக மாற்ற முடியுமா?
எஸ்பிஐ-ன் இன்ஸ்டா சேமிப்புக் கணக்கை ஒரு வருடத்திற்குள் தேவைப்படும் போது சாதாரணச் சேமிப்பு கணக்காக மாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு உங்கள் அருகில் உள்ள வங்கி கிளையை அணுக வேண்டும்.


மினிமம் பேலன்ஸ்
மினிமம் பேலன்ஸ்
2018 ஆகஸ்ட் மாதம் வரை எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை என எதையும் நிர்வகிக்கத் தேவையில்லை. 18 வயது முடிந்த இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தக் கணக்கினை திறக்கலாம்.


ஆதார் மற்றும் பான்
ஆதார் மற்றும் பான்
எஸ்பிஐ யோனோ செயலி உதவியுடன் சேமிப்புக் கணக்கினை துவங்கும் போது ஆதார் மற்றும் பான் எண் விவரங்களை உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.


ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி
எஸ்பிஐ வங்கி ரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து இதே போன்ற ஒரு வங்கி சேவையினை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்