புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator

புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator




உங்கள் ஆண்ட்ராய்ட் play store ல் cam scanner எனும் app ஐ install செய்துக்கொள்ளவும். அதில் open செய்து camera ஐ உபயோகித்து Docs என்பதிலிருந்து QR code என்பதற்கு மாறி பாடநூலில் உள்ள QR code களை scan செய்யவும். பிறகு கிடைக்கும் URL ஐ open செய்யவும்.


பொருளடக்க பக்கம் ( content page ) ல் உள்ள இணைய வளங்கள் (Digi links ) கான QR மற்றும் இணைய செயல்பாடுகள் (ICT corner ) பக்கங்களில் உள்ள QR அனைத்தும் QR code management இணைய வலைபக்கத்தில் சென்று சேரும். அதில் பாட நூலில் உள்ள பக்கங்களின் எண் மற்றும் அதற்கான இணைய உலவு பகுதிகளுக்கான உரலிகளின் இணைப்புகள் ( URL links ) நீல வண்ணத்தில் இருக்கும்.


சிவப்பு வண்ணத்தில் அந்த உரலிகள் எந்த வகையானவை என்பது குறிக்கப்பட்டிருக்கும். திறன் பேசி எனில் அவற்றை தொடுவதன் மூலமோ, கணினி எனில் அதை சுட்டி மூலம் சொடுக்குவதன் மூலமோ குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்திற்கு தங்களை அழைத்துச்செல்லும்.


இந்த இணைய பக்கங்கள் அனைத்தும் பாடநூல் குழுவால் பாடநூலில் வைக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளின் தொகுப்பே.


இவை அன்றி ஆறு இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவையாக (எ.கா X3VU5G ) என்பது போன்று QR code களானது DIKSHA ( Digital Infrastructure for Knowledge sharing ) எனும் இந்திய அளவிலான கல்விசார் வளங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ஓர் வலைபக்கத்தின் (Portal ) QR code களாகும்.


இவற்றில் நம் ஆசிரியர்கள் தயாரித்து அளிக்கும் கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் மதிப்பீட்டு செயல்பாடுகள் இருக்கும். இவை அனைத்தும் நம் தமிழக ஆசிரியர்கள் தயாரித்து இந்த portal ல் உள்ளிடும் வளங்கள். இவற்றை DIKSHA எனப்படும் ஓர் ஆண்ட்ராய்ட் செயலி மூலம் உபயோகிக்க முடியும். சாதாரண QR code reader app ( e.g cam scanner ) உபயோகிக்கும் போது இவற்றிற்கு online தேவைப்படும்.


மாறாக DIKSHA app மூலமாக scan செய்யும் போது முதலில் Guest ஆக உள் நுழைந்து நாம் content களை QR code scan செய்து download செய்துக்கொள்ளலாம்.


ஒரு குறிப்பிட்ட content ஐ download செய்ய பாடபுத்தகத்தின் குறிப்பிட்ட தலைப்பில் வைக்கப்பட்டுள்ள QR code ஐ scan செய்ய வேண்டும். பிறகு download content என்பதை அளித்து ஒரு முறை download செய்துக்கொண்டால் மறு உபயோகத்திற்கு இணைய இணைப்பு இல்லாமல் இந்த content ஐ பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அந்த குறிப்பிட்ட content ஐ பிற திறன்பேசிகளுக்கும் பகிர்ந்து (share) கொள்ள முடியும். இதற்கு wifi direct வகையிலான share it போன்ற மென்பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.



ஒரு பாடநூலுக்கான அனைத்து content களையும் பதிவிறக்கம் செய்ய பாடநூலின் பொருளக்கப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னூல் QR ஐ scan செய்து download all என்பதை அளிக்கவும். சுமார் 1 GB ( ஒவ்வொரு பாடநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள content களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவு மாறு படலாம் ) அளவிலான content மொத்தமாக download ஆகி விடும். இவற்றை வட்டார அளவிலான வட்டார வள மையத்தில் இருந்து share it மூலம் ஆசிரியர்கள் தங்களுக்குள் பாடநூல் அடிப்படையில் offline லேயே பகிர்ந்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த Ecar file களை பள்ளி அளவிலும் வகுப்பு அளவிலும் பகிர்ந்து அளிக்க முடியும்.


இதனால் இணையம் இன்றி அனைத்து E content களையும் அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்த முடியும்.


ஒவ்வொரு QR code ம் ஒரு folder ஆக செயல்படும் இதனால் ஒரு QR code ல் ஒன்றிற்கு மேற்பட்ட மின் ஊடக பதிப்புகளை (econtents ) அளிக்க முடியும். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள QR code களுக்கு தங்களின் சொந்த படைப்புகளை தயாரித்து அனுப்பலாம். இவற்றை தங்கள் Youtube channel ல் பதிவேற்றம் செய்து அந்த வீடியோவிற்கு குறிப்பிட்ட அந்த பாடம் அல்லது பாட உட்தலைப்பனை அளிக்கலாம். அதன் Description ல் அந்த மின் ஊடக வீடியோ எந்த வகையிலானது என்ற குறிப்பினை அளிக்கலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட QR code ஐ scan செய்யும் போது கிடைக்கும் description ஐ அதில் அளித்தலால் போதுமானது. இதற்கென ஒவ்வாரு பாடநூலுக்கும் ஓர் குறிப்பிட்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி என்ற புத்தகத்திற்கு B104 என்ற புத்தக எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக அலகு எண் இதற்கு Unit என்ற ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான U என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக B104U1 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 என்பதை குறிக்ககும்.


அடுத்ததாக பக்க எண் இதற்கு Page என்பதன் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான P என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக B104U1P45 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 – பக்க எண் 45 ல் உள்ள QR code உடன் இணைக்க பரிந்துரைக்கப்படும் வீடீயோ என்பது பொருள்.



அடுத்ததாக கடைசியாக உள்ள CH, HS, AS என்பன முறையே chapter, Hard spot, Assessment என்ற பதங்களை குறிப்பதாகும்.


நீங்கள் உங்கள் youtube ல் பதிவேற்றம் செய்ய Description ஆக இந்த QR code ஐ scan செய்தால் வரக்கூடிய அந்த B104U1P45CH என்ற குறியீட்டினை உள்ளிட்டு அதற்கான key word ஆக இந்த description code மற்றும் QR code ன் கீழ் வழங்கப்பட்டள்ள 6 இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவை குறியீட்டினையும் அந்த பாடம் மற்றும் பாடப்பகுதி சார்ந்த பிற key word களையும் அளித்து youtube ல் பதிவேற்றம் செய்து அந்த link ஐ அளிக்கப்பட்டுள்ள Google sheet ல் share செய்யலாம். Youtube இல்லாவிட்டாலும் நீங்கள் google drive ல் upload செய்து அந்த link ஐயும் கொடுக்கப்பட்ட Google form ல் பகிரலாம். தங்களின் வீடியோக்கள் பாடநூல் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு QR code ல் இணைக்கப்படும் தங்களின் விவரங்களும் அந்த வீடியோவில் பின் இணைப்பாக வெளியிடப்படும். இவ்வாறாக தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தங்களால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் சென்று சேரும்.


கற்றல் மின் ஊடக படைப்புகளுக்கான பணிமனைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்க இந்த Google form ஐ நிரப்பவும்.


பாடநூலில் உள்ள QR code வேலை செய்யும் விதத்தினை சோதிக்க ( 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான சமச்சீர் ” தமிழ் ” பாடத்திட்டத்தின் ) இந்த pdf ஐ download செய்து print செய்து பயன்படுத்தவும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்