ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்


*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.

*முதல்வரின் உத்தரவுபடி அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு ரூ.9 கோடியில் பயோமெட்ரிக் முறை திட்டம் நிறைவேற்றப்படும்*

*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்

*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.


பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.



*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.


*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.


*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்


சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். 

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்