வாட்ஸ் அப்: Latest Updates!




வாடிக்கையாளர்களுக்கு சில புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
முன்னணி சமூக ஊடகமாக விளங்கிவரும் வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப் புது வசதிகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் தற்போது சில புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
குரூப் ஆடியோ கால்ஸ்:
4பேர் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்துகொள்ளும் குரூப் வீடியோ கால் வசதிக்கான முயற்சிகள் நடந்துவரும் நிலையில், குரூப் ஆடியோ கால் வசதி ஐஓஎஸ்ஸில் சோதனை முயற்சியாக செயல்பாட்டுக்கு வருகிறது.
க்ளிக் டு சாட்:
வாட்ஸ் அப்பில் ஒரு எண்னை சேவ் செய்திருந்தால் மட்டுமே அந்த எண்ணுக்கு மெசேஜ் செய்ய முடியும் எனும் நிலை இருந்துவந்தது. தற்போதைய புதிய வசதியின்படி, சேவ் செய்யப்படாத ஓர் எண்ணுக்கும் இனி மெசேஜ் அனுப்பலாம்.
செலெக்ட் ஆல் :
உரையாடலில் ஒவ்வொரு மெசேஜாக நீக்கும், மார்க் செய்யும் வசதியே இருந்தது. தற்போது இதை எளிமையாக்க செலக்ட் ஆல் எனும் புதிய வசதி வருகிறது. இதன் மூலம் ஒரே க்ளிக்கில் அனைத்தையும் செலெக்ட் செய்யலாம்.
ஃபேஸ்புக் கனெக்ட்:
இது, ஃபேஸ்புக் பயனாளர்கள் ஃபேஸ்புக் தகவல்களை, சென்ட் டு வாட்ஸ் அப் எனும் வசதி மூலமாக வாட்ஸ் அப்புக்கு ஷேர் செய்யும் வசதி ஆகும். இந்த வசதியையும் வாட்ஸ் அப் வழங்குகிறது.
அக்கவுண்ட் இன்ஃபர்மேஷன்:
வாட்ஸ் அப் பயனாளர்கள் அக்கவுண்ட் ரிப்போர்ட்களைப் பெறவும், ரிக்வெஸ்ட் செய்யவும் புது வசதி அறிமுகம் ஆகியுள்ளது. இதன் மூலம் 3 நாட்களுக்குள் பயனர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பப்படும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்