CBSE 12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது.



இந்த தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 138 மையங்களில் எழுதினார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், அந்தமான் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 71 ஆயிரம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் எழுதினர்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை cbseexamresults.net, cbseresults.nic.in. மற்றும் results.gov.in. இணையதள முகவரிகளில் பார்வையிடலாம்.

இந்த தகவலை இந்திய கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்