அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என்.ராஜேந்திரனை தமிழக கவர்னரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். என்.ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் ‘தமிழ்நாட்டில் தேசியம்’ மற்றும் ‘சுவதேசியம்’ ஆகிய 2 நூல்களை எழுதி இருக்கிறார்.
27 ஆண்டுகள் கல்வித்துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்திறமையில் அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் இயக்குனராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பாரதிதாசன் பள்ளி நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவில் 2008 மற்றும் 2015-ம் ஆண்டு என 2 முறை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.ராஜேந்திரன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Comments
Post a Comment